போயஸ் கார்டனில் சிசிடிவி அமைக்கும் பணி தீவிரம்!

rajinikanth
போயஸ் கார்டனில் சிசிடிவி அமைக்கும் பணி தீவிரம்!
siva| Last Updated: புதன், 9 டிசம்பர் 2020 (12:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கி மே மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தார்

இதனை அடுத்து அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் வீடு அமைந்திருக்கும் போயஸ் கார்டனில் தற்போது முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களின் வருகை அதிகரித்ததை அடுத்து ரஜினிகாந்தின் வீடு உள்ள தெரு முழுவதும் சிசிடிவி கேமரா ஆன் கேமராவை பொருத்த ரஜினிகாந்த் திட்டமிட்டார் என்ற செய்தி நேற்று வந்தது
இதனை அடுத்து இன்று சிசிடிவி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் இருக்கும் தெரு முழுவதும் தனது சொந்த செலவில் ரஜினிகாந்த் சிசிடிவி கேமராவை அமைத்து வருகிறார் என்பதும் இதன் மூலம் அவரை பார்க்க வருபவர்கள் யார் யார் என்பது தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :