திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (22:39 IST)

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரஜினி-கமல் 45 நிமிடம் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இளையமகள் திருமணத்திற்காக தனக்கு நெருங்கியவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரும் நிலையில் சற்றுமுன் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்திற்கு சென்றார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.

கமல்ஹாசனிடம் தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்த ரஜினிகாந்த் கண்டிப்பாக திருமணத்திற்கு வருகை தரும்படி கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு வருகை தர உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர் டாக்டர்.மகேந்திரன் மற்றும் மக்கள் நீதி மையத்தின் உயர்மட்டகுழு உறுப்பினர் கமீலா நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.