வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 பிப்ரவரி 2019 (19:38 IST)

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழழும் ரஜினி; ஸ்டாலினுடன் சந்திப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இது நட்பு ரீதியிலான சந்திப்பா? அல்லது அரசியல் சந்திப்பா? என்ற தகவலும் கிடைத்துள்ளது. 
 
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு சென்று சந்தித்தார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எந்த பேச்சும் இல்லை. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யாவிற்கு திருமணம் நடைபெற உள்ளது. 
 
எனவே, ஸ்டாலினை சந்தித்து ரஜினி மகளின் திருமண பத்திரிக்கையை வழங்கி, திருமணத்திற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துள்ளார். 
 
ஏற்கனவே, காலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசரை அவரது வீட்டில் வைத்து ரஜினிகாந்த் சந்தித்த்து அழைப்பிதழ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.