ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ஒன்றியம் என்ற வார்த்தையைக் கூறியே ஒப்பேற்ற நினைப்பதா? சீமான் கண்டனம்

ஒன்றியம் என்னும் வார்த்தையை மட்டுமே கூறி ஒப்பேற்றி விடலாம் என்று எண்ணாமல்  மத்திய அரசை திமுக ஆக்கபூர்வமாக எதிர்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
 
பாஜகவை முதன்மை எதிரியாக கட்டமைத்த திமுக, தற்போது மென்மையான போக்கை கடைபிடிப்பது ஏமாற்றம் தருகிறது என்று கூறிய சீமான், பாஜகவை ஆதரித்து அரசியல் செய்ய திமுக முயற்சித்தது என்பதில் எந்த வித ஐயமும் இல்லை என்று கூறியுள்ளார் சீமானின் இந்த அறிக்கையை திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ஒன்றியம் எந்த வார்த்தையை மட்டும் கூறி ஒப்பேற்ற பெற்ற நினைக்காமல் அம்மையார் மம்தா பானர்ஜி போல உளமாற ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்த்து திமுக முன்வரவேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் 
மேலும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று தமிழகத்திற்கான விலக்கை சாத்தியப்படுத்தும் எனக்கூறிய திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? என்றும் சீமான் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்
 
தீர்மானமே இயற்றப்படவில்லை அப்புறம் எப்படி ஒப்புதல் தர கோரி குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்