ஜூலையில் வெளியாகிறது ரஜினி நடித்த கபாலி
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படம் ரீலிஸ் ஆகும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகில் மட்டும் அல்லாது உலக அளவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி திரைப்படம்.
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்ட பலர் முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகி உள்ளது கபாலி திரைப்படம். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை தாணு தயாரித்துள்ளார்.
ஜூலை முதல் தேதி கபாலி படம் வெளியிடலாம் என தயாரிப்பு நிர்வகாம் முதலில் முடிவு செய்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தப் படம் தள்ளிப்போனது.
இந்த நிலையில், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கபாலி திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கபாலி படத்துக்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.