1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Continuous Arrest of Tamil Fishermen by Sri Lankan Navy Raises Concern"

33 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. சிங்கள ராணுவம் அராஜகம்..!

தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்களை இலங்கையின் சிங்கள படையினர் அவ்வப்போது கைது செய்வது தொடர்கதை ஆகி வரும் நிலையில் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு பலமுறை கடிதம் எழுதியும் சிங்கள படையின் அராஜகம் தொடர்ந்து கொண்டே வருகிறது.

சமீபத்தில் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்த போது கூட இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 பேர் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்ததாகவும், மீனவர்களின் மூன்று விசை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அஜித், ஷோபனா, பாலையா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!