இந்தியாவின் 76வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கவர்னர்கல் தேசியக்கொடி ஏற்றி வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் தொடர்ந்து வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். போலீஸ் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு ஆகியவையும் நடைபெற்றன. இன்று குடியரசு தினம் என்பதால் பாதுகாப்பு பணிகளில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K