வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2019 (19:12 IST)

பாஜகவை ஒதுக்கித் தள்ளிய ரஜினி ! அவரது மாஸ்டர் பிளான் என்ன ?

எப்ப வருவார்...? எப்ப வருவார் ...? என ரஜினியின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் எத்துணை வருடங்களாகத் காத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தனது சேவை மனப்பான்மையில் இந்த அரசியல் களத்துக்கு வரவுள்ளார் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அதற்கு முன்னறிவிப்பாக  சில ஆண்டுகளுக்கு முன்’ஆன்மிக அரசியல்’ என்று அவர் அறிவித்தபோது, திரவிடம் வேரூன்றிய  தமிழக அரசியலில் லேசாக சலசலப்பு ஏற்பட்டு, ரஜினியின் பேச்சை கலாய்த்தனர். அப்பொழுது இதுதான் சமயம் எனப் பார்த்து மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் என்ற  ரஜினிக்கு  தூண்டில் போட்டது. 
 
ஆனால் ஆன்மிகம் என்பது மதத்தை மட்டுமல்ல  ஒழுக்கத்தையும் நெறிமுறையையும் சேர்ந்ததுதான் என்று ஊழலுக்கு தன் கட்சியில் இடமில்லை.அப்படி நினைப்புள்ளவர்கள் ஓடிப் போய்விடுங்கள் என   ரஜினி தனது பேச்சின் மூலம் தெளிவாய் விளக்கி விட்டார்.
 
இந்நிலையில் தமிழகத்தில் சிறப்பான தலைமையிடம் வெற்றிடமாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். ரஜினியின் கூற்றின்படி தமிழகத்தில் தலைமை உண்டு; ஆனால்  சிறப்பான தலைமைக்குத்தான் வெற்றிடமுண்டு என அவர் ஒப்புக்கொள்கிறார்.
 
அதற்கு முக்கிய காரணம், கடந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடிய திமுக தலைவர் ஸ்டாலின் வளர்ச்சியையும் ; எத்தனையோ எதிர்ப்புகள் அரசியல் தலையீடுகள், நீதிமன்ற போராட்டம், உள்கட்சி பூசல்கள், எதிர்க்கட்சிகளில்  ஏசல்கள் என அனைத்தையும் கடந்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியையும்  மக்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டதாகத்தானே அர்த்தம்.
 
அப்படி என்றால் சிறப்பான தலைவர் என்று ரஜினி சொல்வதற்கு வரையறைகளை அவர்தான் மக்களுக்கு சொல்ல வேண்டும். இதில் முக்கியமாக சிறப்பான வெற்றிடம் என்பது மதம், சாதி, ஊழல்களில் சிக்கிக்கொள்ளாத, குண்டர்கள் , ரவுடிகளை வைத்துக் கட்டப் பஞ்சாயத்து செய்யாத அடிமைபட்டுக் கிடக்காமல் சுயமரியாதையில் செல்லும் விதத்தில் உள்ள ஒரு தலைமையைக் குறிவைத்துத்தான் அவர் சிறப்பான வெற்றிடம் எனக் கூறியிருப்பார் என  அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். 
 
மேலும், திராவிட அரசியலுடன் கூட்டுச் சேராமல், மதச் சாயம் பூசிய பாஜவுடன் கூட்டணிக் கை கோர்க்காமல் தனது ’ஆன்மிக அரசியல் ’பாதையில் தனித்துவமாக பயணிக்கப் போவதற்கான அடுத்த அதிரடி மற்றும் தனது மாஸ்டர் பிளான் ஆன ‘என் வழி தனி வழி’ என்பதற்காக  அறிகுறிதான் ரஜினியின் இன்றைய பேச்சு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.