திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

இன்று திமுக செயற்குழு: அழகிரி குறித்து முக்கிய முடிவா?

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் மறைந்து ஒருவாரம் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுதான் அந்த துக்கம் முடிவடைகிறது. ஆனால் துக்கம் முடியும் முன்பே பதவிச்சண்டை, பங்காளி  சண்டை காரணமாக இன்று திமுகவின் செயற்குழு கூடுவது உண்மையான திமுக விசுவாசிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.
 
இந்த நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்  தலைமையில் கூடும் இன்றையை திமுக செயற்குழுவில் முதலில் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என தெரிகிறது. அதனையடுத்தே திமுக தலைவர் யார்? என்பது உள்பட ஒருசில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
நேற்று சென்னை மெரீனாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அழகிரி அளித்த பேட்டி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று திமுகவின் செயற்குழு கூடுகிறது. இந்த செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்தே அழகிரியின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.