வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (13:38 IST)

சென்னையில் 149 பேருக்கு கொரோனா! – பட்டியல் வெளியிட்டது மாநகராட்சி!

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில் மாகாண வாரியாக கொரோனா பரவியவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேக்கப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில், தரவுகளை சேகரித்தல், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என தன்னார்வலர்களுடன் இணைந்து சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை சென்னையில் 149 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள விவரப்பட்டியல்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 40 பேரும், திருவிக நகர் பகுதிகளில் 22 பேர், கோடம்பாக்கம் 19 பேர், அண்ணாநகரில் 15, தண்டையார் பேட்டை பகுதிகளில் 12 பேர், தேனாம்பேட்டை பகுதிகளில் 11 பேர், திருவொற்றியூர், அடையாறு, வளசரவாக்கம் பகுதிகளில் தலா 4 பேர் என மொத்தமாக 149 பேருக்கு கொரானா இருப்பது உறுதியாகியுள்ளது.