40,000-த்திற்கு கீழ் சென்ற தினசரி பாதிப்பு: இந்திய கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரமாக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 39,796 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,05,02,362 லிருந்து 3,05,42,158 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 42,352 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அதேபோல் இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,96,58,078-ல் இருந்து 2,97,00,430 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.