வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2020 (15:27 IST)

நீட் விவகாரம்: 37 திமுக எம்பிக்களும் ராஜினாமா செய்யுங்கள் - ராஜன் செல்லப்பா

நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மூன்று உயிர்கள் அடுத்தடுத்து பரிதாபமாக பலியானது. தேர்வு எழுதும் முன்னரே மாணவர்கள் பயத்தினால் தற்கொலை செய்துகொண்டதால் கடந்த ஞாயிற்று கிழமை பெரும் பரபரப்புக்கு இடையே நீட்தேர்வு நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் எதிர் கட்சியை குற்றம் சுமத்தினர். அந்தவகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். அத்துடன் மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் தரும் என தெரிவித்தார்.

இந்நிலையில் தற்ப்போது அவரின் கருத்துக்கு பதிலளித்துள்ள அதிமுகவின் ராஜன் செல்லப்பா, நீட் விவகாரத்தில் திமுகவின் 37 எம்பிக்களும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரலாமே..? என கேள்வியை அவர்கள் பக்கமே திருப்பி விட்டு திமுகவினரை சிக்கலில் மாட்டிவிட்டுள்ளார்.