வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 19 மே 2020 (14:43 IST)

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி நெல்லை, திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில்  மழை பெய்ய  வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் உள்ள அம்பன் புயலால் சில இடங்களில் நேற்று மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு மழை பெய்தது. சில மாவட்டங்களில் கனமழை பெய்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று, தமிழகத்தில்  வெப்பச்சலனத்தால், சலனத்தால் கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி நெல்லை, திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில்  மழை பெய்ய  வாய்ப்புள்ளது எனவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் , நாளை மேற்கு வங்கம், வங்க தேசம் இடையே அம்பன் புயல் கரையைக் கடக்கிறது.