தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் ஒரே நாளில் அதிகரித்த காற்ற மாசு குறியீடு!
- தீபாவளி முடிந்ததும் கொட்டிய மழை: சென்னை சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்!
- அடுத்த ஐபிஎல் தொடரில் தோனிக்கு பதில் வேறு கேப்டன்?? முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல்
- நீண்ட இடைவெளிக்கு பின் 2000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
- இனி சென்னை அணிக்கு ரெய்னா விளையாடவே மாட்டார்… குஜராத் அணிக்கு அவர்தான் கேப்டன்?
அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே
குறிப்பாக இன்று நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் விட்டுவிட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த செய்தி குறிப்பு ஒன்றில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்
ஏற்கனவே நவம்பர் 17ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
