செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: புதன், 3 செப்டம்பர் 2025 (15:41 IST)

8 மாவட்டங்களில் காத்திருக்குது மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

Rain

தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

மேற்கு திசை காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டு வடப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி இன்று மாலை தர்ம்புரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவன்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூட் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை இரவில் லேசான மழை சில பகுதிகளில் பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K