வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (07:32 IST)

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்பட மூன்று மாவட்டங்களில் இன்று காலை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் குளிர்காலம் தொடங்கிவிட்டதால் இனி மாநிலம் முழுவதும் லேசான மற்றும் மிதமான மழை மட்டுமே பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

காலை 9 மணிக்குள் மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.  

மேலும் அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva