1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (18:17 IST)

அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை- டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

dinakaran
சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி. தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளதாவது:

''சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் எடையளவு மிகவும் குறைவாக இருப்பதாக நுகர்வோர் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

518 முதல் 520 கிராம் வரை இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும் சுமார் 70 கிராம் வரை குறைவான எடையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் ஆவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் என பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்தி கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாத வகையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டும் பால் பாக்கெட்டுகளின் எடை சரியான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆவின் நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.