அடுத்த 4 நாட்களுக்கு கனமழை? எந்தெந்த மாவட்டங்களில்..? – வானிலை ஆய்வு மையம்!
கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்கள் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களில் தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், ஜூலை 10 முதல் 12ம் தேதிவரை நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.