திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (07:36 IST)

சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், அணைகள், ஏரிகள், குளங்கள் என அனைத்தும் நிரம்பி இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஜூன் வரை தண்ணீர் கஷ்டத்துக்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
மேலும் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் வகையில் அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி இன்னும் ஒரு சில நாட்களுக்கு தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்திய நிலையில் தற்போது தட்பவெட்பம் குளிர்ச்சியான நிலையில் இருப்பது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்று பரவலாக ஒரு சில இடங்களில் மழை பெய்ததாவும் அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ததும் தகவல்கள் வெளிவந்துள்ளன