திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (21:03 IST)

கனவு நிறைவேறிடுச்சு - பாராட்டு மழையில் யோகி பாபு!

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்தவர் பாபு. இதன் பின்னர் யோகி பாபு என அழைப்படுகிறார். இவர், அரண்மனை, பெரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகான யோகிபாபு, நடிகர் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் விஜய் 65 உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.
 
கடைசியாக வெளியான வரின் மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் யோகி பாபு தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் நகரம் பேடு கிராமத்தில் வாராஹி அம்மன் கோவில் கட்டி கும்பாபிஷேகம்  நடத்தி உள்ளார். அவரின் பல நாள் கனவான இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.