திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (16:15 IST)

குண்டும் குழியுமாக மாறிய மரண சாலை..! கொட்டும் மழையில் மக்கள் போராட்டம்..!!

protest
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கடந்த 8 ஆண்டுகளாக சாலை சீரமைக்காததை கண்டித்து கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் ஊராட்சி விட தண்டலம் அரசூர் வழியாக செல்லும் சாலையானது கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாகியும்  முறையாக சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டும் அவ்வழியாக செல்லும் பேருந்தும் முறையாக இயக்கப்படாததால் பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் அவதி  அடைந்து வந்தனர்.
 
இதுகுறித்து பலமுறை ஆட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

கொட்டும் மழையிலும் தங்கள் போராட்டத்தை கிராம மக்கள் தொடர்ந்தனர். தங்கள் கோரிக்கையை அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.