1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (15:17 IST)

தமிழ்நாட்டில் பாஜக தலைமையில்தான் கூட்டணி.. முன்னாள் முதல்வர் உறுதி..!

தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘10 ஆண்டு காலம் இந்தியாவை சிறப்பாக வழி நடத்திய நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை பொருத்தவரை தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும்  அந்த கூட்டணியில் எங்கள் அமைப்பும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.


மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எங்கள் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஓ பன்னீர்செல்வம் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.  

இதனை அடுத்து தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மூன்று முக்கிய கூட்டணிகள் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran