வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (09:02 IST)

நெல்லையை ரவுண்டு கட்டும் இடியுடன் கூடிய மழை!!

நெல்லையை ரவுண்டு கட்டும் இடியுடன் கூடிய மழை!!
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
 
காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக வரும் 28 ஆம் தேதி வரை நெல்லை, தென்காசி, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன் படி, நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.