வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தென் மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக கன்னியாகுமரி நெல்லை தென்காசி தூத்துக்குடி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது