செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (18:32 IST)

சென்னையின் பல்வேறு இடங்களில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

rain
சென்னையின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நிமிடங்களாக மிதமான மழை பெய்து வருவதை அடுத்து சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. நிலையில் சற்று முன்னர் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது 
 
தேனாம்பேட்டை, நந்தனம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
சென்னையில் பகலில் வெயில் கொளுத்தி வந்ததை அடுத்து தற்போது மழை பெய்துள்ளதால் தட்ப வெப்பநிலை குளிர்ச்சியாக காணப்படுகிறது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.