தமிழகத்தை குறி வைக்கும் சூறாவளி சுழற்சி.. 10 மாவட்டங்களில் கனமழை..!
வங்க கடலில் தோன்றியுள்ள சூறாவளி சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
எனவே மேற்கண்ட 10 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva