திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 7 ஜனவரி 2024 (17:58 IST)

சென்னையில் காலை முதல் விடாமல் பெய்யும் மழை.. புறநகர் பகுதிகளிலும் மழை..!

rain red umbrella
சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் மழை விட்டபாடு இல்லை என்பதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே சென்னை உள்பட  தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது. இதனை அடுத்து சென்னையில் இன்று காலை முதல் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 
 
இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த மழை நாளையும் தொடர்ந்தால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், கல்பாக்கம், புதுப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்து வருகிறது!
 
Edited by Mahendran