திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 7 ஜனவரி 2024 (13:47 IST)

நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கனமழை: தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை..!

farmers flood
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளதாகவும் தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கன அடி நீர் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் கால்நடைகளையும் இறக்க வேண்டாம் என்றும் ஒரு சில பகுதிகளில் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் தாமிரபரணி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது

ஆனால் அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் இருந்த பெருமழை , வெள்ளம் குறித்த ஆபத்து இல்லை என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran