தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ஜோனு மழை பெய்ய போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?
- ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!
- தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!
- சென்னை ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள்.. சீல் வைத்த காவல்துறை அதிகாரிகள்..!
- சென்னையில் மே 12ஆம் தேதி சிஎஸ்கே-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?
சென்னையில் அதிகாலையில் மிதமான மழை.. அக்னி நட்சத்திரம் நேரத்தில் கிடைத்த குளிர்ச்சி..!
சென்னையில் அதிகாலையில் மிதமான மழை பெய்ததை அடுத்து அக்னி நட்சத்திர வெயில் காரணமாக வெப்பத்தில் தவித்துக் கொண்டிருந்த பொது மக்களுக்கு சற்று மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அதிகாலை முதலே குளிர்ச்சியான தட்பவெப்ப சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி விழுப்புரம் மாவட்டத்தின் காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
Edited by Siva
