ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (20:15 IST)

இன்றிரவு 10 மணி வரை 35 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

இன்றிரவு 10 மணி வரை செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
 
மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இன்று இரவு தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 
 
Edited by Siva