திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (15:24 IST)

இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொருத்தவரை மாலை மற்றும் இரவில் மழை பெய்யும் என்றும் ஆனால் அதே நேரத்தில் பகலில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அரபு கடல் பகுதி, தெற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதியில் ஜூலை 15ஆம் தேதி வரை 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva