புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (17:29 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பின்வரும் 23 மாவட்டங்களில் பெய்யும் என வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அந்த 23 மாவட்டங்கள் இதோ:  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தஞ்சாவூர், அரியலூர்,பெரம்பலூர், கடலூர்
 
Edited by Siva