வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (07:55 IST)

பொங்கலுக்கு பேருந்துகள் ஓடுமா? ஓடாதா.. இன்று முக்கிய பேச்சுவார்த்தை.. !

transport
பொங்கல் பண்டிகை கொண்டாட சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் செல்ல இருக்கும் நிலையில் அவர்கள் பெரும்பாலும் நம்புவது தமிழக போக்குவரத்து துறை இயக்கம் சிறப்பு பேருந்துகள் தான்.

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளதால் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் உட்பட மற்ற பேருந்துகள் இயங்குமா? இயங்காதா என்ற  சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளை தொழிலாளர் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர் ஆணையம் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுத்துள்ள நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இன்றைய பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டால் பொங்கலுக்கு பேருந்துகள் இயங்கும் என்றும் இல்லையேல் நாளை முதல் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே இன்றைய பேச்சு வார்த்தையின் முடிவை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

Edited by Siva