தொடர்புடைய செய்திகள்
- சோனியா காந்திக்கு மு.க.ஸ்டாலின் அளித்த புத்தகம்? – வைரலாகும் புகைப்படம்!
- நான் செஞ்சது தப்புதான்.. மன்னிசுடுங்க! காலில் விழுந்து கதறிய மதன்!? – சிக்கியது எப்படி?
- குறையும் கொரோனா; மேலும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு? – நாளை முதல்வர் ஆலோசனை!
- தலைமறைவான பப்ஜி மதன்; தருமபுரியில் கைது செய்த போலீஸ்!
- கோவில் நகை விவரங்கள் கிடையாது; கோவில்கள் திறப்பு எப்போது? – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்து வரும் நிலையில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மழை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், அடுத்த இரு நாட்களில் சென்னை, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
