1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain alert for 7 districts for Tamil Nadu

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை!!

தமிழகம்
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash