1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain Alert for 23 Districts in Tamil Nadu Tonight

இன்று இரவு தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Rain
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று இரவு மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று சென்னையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பல பகுதிகளில் மழை பெய்தது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில், இன்று 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இன்று இரவு ஏழு மணிக்கு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடையே மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
 
அதே போல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், கரூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து, மேற்கண்ட 23 மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மும்மொழிக் கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!