செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (15:01 IST)

சுரங்கப்பாதையில் பெண் மருத்துவர் மரணம்: ரயில்வே விளக்கம்

சுரங்கப்பாதையில் பெண் மருத்துவர் மரணம்: ரயில்வே விளக்கம்
புதுக்கோட்டையில் ரயில்வே சுரங்க பாதைகள் தேங்கிய மழைநீரில் புகாரில் சிக்கிய பெண் மருத்துவர் இறந்ததற்கு ரயில்வே துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது
 
ரயில்வே சுரங்கப் பாதைகள் மழைநீர் தேங்கியுள்ளது தெரியாமல் காரை ஓட்டிச் சென்ற மருத்துவர் சத்யா பரிதாபமாக பலியானார். சம்பவம் நிகழ்ந்தது இரவு 7 மணிக்கு பெய்த மழையால் சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கவில்லை. சுரங்க பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரில் கார் சிக்கியது இரவு எட்டு முப்பது மணிக்கு தான் கண்டறியப்பட்டது. 
சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேறும் வகையில் அமைப்பு இருந்ததாகவும் ஆனால் மழை நீர் வெளியேறும் வழியை அருகிலிருந்த நில உரிமையாளர் அடைத்து விட்டதாகவும் அதனால்தான் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதாகவும் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது
 
இதனை அடுத்து சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதை அடைத்த நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறையின் இந்த விளக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.