திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 பிப்ரவரி 2022 (09:05 IST)

ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியா? காங்கிரஸார் கூறுவது என்ன?

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்திலுள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல்காந்தி 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
நேற்று பாராளுமன்றத்தில் தமிழகம் குறித்தும் தமிழர்கள் குறித்தும் ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. இதனை காங்கிரசாரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் போட்டியிட்டால் பாதுகாப்பாக வெற்றி பெற்றுவிடலாம் என்றும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் மிக எளிதில் வெற்றி கிடைக்கும் என ராகுல் காந்தி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுவதால் காங்கிரசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முதல் முறையாக பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிடுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது