இது நாடா..? இல்லை சுடுகாடா..? – நாகலாந்து சம்பவம் குறித்து சீமான் கண்டனம்!
நாகலாந்தில் பயங்கரவாதிகள் என தவறாக கருது பாதுகாப்பு படையினர் சொந்த நாட்டு மக்களையே கொன்ற சம்பவத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகலாந்து மாநிலத்தில் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் பொதுமக்களை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறுத்து பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்தும், தாக்குதல்களிலிருந்தும் நாட்டை காக்க உருவாக்கப்பட்ட ராணுவம் இம்மண்ணின் மக்களான போற்ற வேண்டிய ஆதித்தொல்குடிகளையே சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சொந்த நாட்டு மக்கள் மீது ஏவப்பட்ட இந்த அரச வன்முறையை கடுமையாக எதிர்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.