1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (11:40 IST)

பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை சுட்ட ராணுவத்தினர்: 13 பேர் பரிதாப பலி!

பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்களை பாதுகாப்பு படையினர் சுட்டதில் 13 அப்பாவிகள் உயிரிழந்த சம்பவம் நாகலாந்து மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாகலாந்து மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர் என்பதும் இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாகலாந்து மாநிலத்தில் உள்ள மோன் என்ற நகரில் ஒரு சிலர் சந்தேகத்திற்கிடமாக இருந்த நிலையில் அவர்கள் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர் 
 
ஆனால் துப்பாக்கி சூடு முடிந்த பிறகு பார்த்தபோது அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது