1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (12:25 IST)

தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடையா? சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் கோபிமஞ்சூரியன் உள்பட சில உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பதில் கூறியுள்ளார். 
 
சமீபத்தில் கர்நாடகத்தில் பஞ்சுமிட்டாய்க்கு தடை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்திலும் தடை செய்யப்பட்டது என்பதும் அதேபோல் கர்நாடக மாநிலம், கோவா உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கு தடை விதிக்கப்பட மாட்டாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் 
 
 எந்த உணவு பொருள்களில் கெடுதல் இருக்கிறதோ அதை உணவுப் பொருள் பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்து அதன் பின்னர் தான் தடை செய்வோம் என்றும் கர்நாடக மாநிலத்தில் தடை செய்ததற்காக தமிழகத்திலும் தடை செய்ய முடியாது என்றும் எனவே இப்போதைக்கு கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற பொருள்களுக்கு தடை இருக்கிறது, ஆனால் கர்நாடகாவில் இதற்கெல்லாம் தடை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்
 
குழந்தைகள் முதல் பெரியவர்களாக விரும்பி சாப்பிடும் கோபி மஞ்சூரியனுக்கு தடை இல்லை என்ற அமைச்சரின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva