செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2024 (19:46 IST)

தோல்வி அடைந்தாலும் சமூக பணிகள் தொடரும்: நடிகை ராதிகா சரத்குமார்

sarathkumar-radhika
விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் தோல்வி அடைந்த நிலையில் தோல்வி அடைந்தாலும் தன்னுடைய சமூக பணி மற்றும் மக்கள் நல பணி தொடரும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
எனது அரசியல் பயணத்தில் நான் முதன்முறையாக விருதுநகர் பாராளுமன்றத் தேர்தல் 2024 - இல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் கண்டதில், எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
விருதுநகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தெரிவித்தது போல, மக்களுக்கான எனது செயல்பாடும், சமூக  பணியும், மக்கள்நல பணியும் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran