செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (19:52 IST)

கமல்ஹாசன் ஒரு சிப்பிக்குள் முத்து: ராதிகா பிரச்சாரம்

கமல்ஹாசன் ஒரு சிப்பிக்குள் முத்து: ராதிகா பிரச்சாரம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஒரு சிப்பிக்குள் முத்து என்றும் அவர் தமிழ்நாட்டின் பெயர் சொல்லும் பிள்ளையாக இருப்பார் என்றும் நடிகை ராதிகா பிரசாரம் செய்துள்ளார் 
 
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 37 தொகுதிகளை பெற்று உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக சரத்குமார் மற்றும் ராதிகா தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் நடிகை ராதிகா என்று பிரச்சாரம் செய்தார். அவருடன் கமல்ஹாசன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக வாக்கு திரட்டிய ராதிகா கமல்ஹாசன் சிப்பிக்குள் முத்தாக கிடைத்தவர் என்றும் நாளை தமிழ்நாட்டின் பேர் சொல்லும் பிள்ளையாக இருப்பார் என்றும் கூறினார்
 
சிப்பிக்குள் முத்து மற்றும் பேர் சொல்லும் பிள்ளை ஆகிய இரண்டு படங்களிலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ராதிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது