திங்கள், 4 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (13:13 IST)

சோகமாகவும் பயமாகவும் உள்ளது… ஓடிடி கட்டுப்பாடுகள் குறித்து ராதிகா ஆப்தே பதில்!

ஓடிடி களுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு சட்ட விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது தொடர்பாக நடிகை ராதிகா ஆப்தே கருத்து தெரிவித்துள்ளார்.

வரிசையாக ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் சர்ச்சைகளை எழுப்பி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான தாண்டவ் தொடர் இந்து கடவுள்களை இழிவுபடுத்துவதாக சொல்லி பலரும் குற்றச்சாட்டை வைக்கவே அந்த தொடரின் இயக்குனரும் அமேசான் ப்ரைம் நிறுவனமும் மன்னிப்புக் கேட்டனர். இந்நிலையில் ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சில சட்ட விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள நடிகை ராதிகா ஆப்தே ‘நமது கருத்துக்கு மாற்றுக்கருத்துகள் எழும்போது  கருத்துச் சுதந்திரத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் உணரவேண்டும். நாம் செல்லும் பாதை குறித்து எனக்கு சோகமும் பயமும் உருவாகிறது. ஓடிடி தளங்கள் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அவை எங்கு செல்கின்றன என்பது குறித்து நாம் பார்க்க ஐந்து ஆண்டுகளாவது ஆகவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.