1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 7 ஜூலை 2018 (18:31 IST)

மூளை செயலிழந்தவர் மு.க.அழகிரி: திமுக கடும் விமர்சனம்

முன்னாள் மத்திய அமைச்சரும்  திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி கடந்த சில வருடங்களுக்கு முன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் அவ்வப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
 
சமீபத்தில் கூட செயல்படாத தலைவர் செயல் தலைவராக உள்ளார் என்று ஸ்டாலினை அழகிரி கடுமையாக விமர்சனம் செய்தார். இருப்பினும் ஸ்டாலின் இன்னும் அமைதி காத்து வருகிறார். மு.க.அழகிரிக்கு அவர் நேரடியாக எந்த பதிலும் கூறவில்லை.
 
இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி இன்று மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்த மு.க.அழகிரியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். "திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை செயல்படாத தலைவர் என விமர்சித்த மு.க.அழகிரி, மூளை செயலிழந்தவர் என்று அவர் கூறியுள்ளார். 
 
ஆர்.எஸ்.பாரதி, ஸ்டாலின் அனுமதியுடன் தான் இவ்வாறு கூறினாரா? அல்லது அவராகவே விமர்சனம் செய்கிறாரா? என்று புரியாமல் திமுகவின் மற்ற தலைவர்களும் திமுக தொண்டர்களும் அமைதி காத்து வருகின்றனர். எது எப்படியோ, திமுகவில் மீண்டும் பங்காளிச்சண்டை ஆரம்பித்துவிட்டதை எண்ணி திமுகவுக்கு எதிரான கட்சிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன என்பது மட்டும் உண்மை