திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 பிப்ரவரி 2023 (08:05 IST)

இந்தியாவில் முதல்முறையாக விமான நிலையத்தில் தியேட்டர்கள்: சென்னை பிவிஆர் அசத்தல்

PVR
இந்தியாவில் முதல்முறையாக சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்குகள் கொண்ட வளாகம் திறக்கப்படுவதாக பிவிஆர் அறிவித்துள்ளது.
 
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட ஐந்து திரைகள் கொண்ட தியேட்டர்கள் கொண்ட பிவிஆர் திரையரங்க வளாகம் நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது. 
 
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளதாக பிவிஆர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி லெவல் பார்க்கிங் கட்டணம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தில் திரையரங்குகளில் சென்று திரைப்படமும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை விமான நிலையத்தில் பிவிஆர் திரையரங்கம் திறக்கப்பட்டதை அடுத்து இந்த திரையரங்குகள் விமான பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva