வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2023 (12:00 IST)

சென்னை - காஷ்மீர்.. தளபதி 67 படக்குழுவினர்களுக்காக தனி விமானம்!

thalapathi 67 flight
சென்னை - காஷ்மீர்.. தளபதி 67 படக்குழுவினர்களுக்காக தனி விமானம்!
தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் படக்குழுவினர் இன்று காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளனர். 
 
இந்த நிலையில் தளபதி 67 பட குழுவினர் இன்று சென்னையில் இருந்து காஷ்மீருக்கு தனி விமான மூலம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
காஷ்மீரில் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பிறகு சென்னை திரும்பும் பட குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து திட்டமிடுவார்கள் என்று கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே சென்னை மற்றும் கொடைக்கானலில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. விஜய், திரிஷா உட்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லலித் மற்றும் ஜெகதீஷ் தயாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran