கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு.. தனி சின்னத்தில் போட்டி என அறிவிப்பு..!
அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் திமுக போட்டியிடும் 21 வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்
அதிமுக கூட்டணியில் அவருக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்
இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அதிமுக கூட்டணியின் முதல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran