தொடர்புடைய செய்திகள்
- 7 - தொகுதிகள் கேட்கும் தேமுதிக : சிக்கலில் அதிமுக
- கூட்டணி கட்சிகளுக்கே 20 போயிருச்சு! என்ன செய்ய போகிறது திமுக?
- சென்னையில் அதிமுக பிரம்மாண்ட மாநாடு – கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பு !
- தேமுதிக நாளை முக்கிய முடிவு : கூட்டணியா? தனித்துப் போட்டியா?
- என்ன ஆச்சு ஸ்டாலினுக்கு? கூட்டணி பங்கீட்டில் ஏன் இப்படி திணறுகிறார்?
தேமுதிகவை அடுத்து அதிமுகவில் இணைந்த மேலும் ஒரு கட்சி
அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக, பாஜக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து பேசியதால் தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் இணைவது உறுதியாகிவிட்டது. அதேபோல் புதுவையில் ரங்கசாமி கட்சியுடன் அதிமுக கூட்டணி இணைந்துள்ளது
இந்த நிலையில் இன்று அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சியாக புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளது இந்த கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது இந்த தொகுதியில் அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆக மொத்தம் அதிமுக கூட்டணியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாமக 7, பாஜக 5, தேமுதிக 5 (உத்தேசமாக), புதிய தமிழகம் 1, புதிய நீதிக்கட்சி 1, ரங்கசாமி கட்சி 1 என மொத்தம் 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் 20 தொகுதிகள் அதிமுகவுக்கும் கிடைத்துள்ளது என்பதுதான் தற்போதைய நிலை
அதிமுக, திமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட தொகுதி உடன்பாடுகளை முடித்துவிட்ட நிலையில் அமமுக, மநீக, போன்ற கட்சிகள் அடுத்த என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் இருப்பது போல் தெரிகிறது
அடுத்த கட்டுரையில்
