1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (15:36 IST)

தேமுதிக நாளை முக்கிய முடிவு : கூட்டணியா? தனித்துப் போட்டியா?

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையை கட்சிதமாய நடத்தி வருகின்றனர். சில கட்சிகள் இருபெரும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர். சில கட்சிகள் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வைகோவின் மதிமுகவுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.

இன்னொரு பலமிக்க மெகா கூட்டணி என்று கூறிக்கொள்ளும் அதிமுக - பாஜக - பாமக  ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

மேலும் இதில் தேமுதிகவையும் இணைக்க பெரும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ஆனால் தேமுதிக தரப்பு பாமக வுக்கு நிகராக  தொகுதிகள் கேட்பதால் சற்று இழுபறி ஏற்பட்டது. இறுதியாக அதிமுக 5 தொகுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி ஒதுக்குவதாக கூறியது. இதை தேமுதிக திருப்தி அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் நாளை மார்ச் 5 ஆம் தேதி தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என நேற்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பழைய கசப்புகளை மறந்தாலும் தேமுதிக திமுகவின் பக்கம் செல்ல வாய்பில்லை என்றே தெரிகிறது.

இந்தமுறை தேசிய அரசியலில் மக்களவைவில் அல்லது மாநிலங்களவையில் காலூன்றிவிட நினைக்கும் பிரேமலதா விஜயகாந்தும் கட்சியின் எதிர்காலத்தை நினைத்துதான் இவ்வளவு நாள் காய்நகர்த்தினார்.

இந்நிலையில் தேமுதிக  நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த காலத்தில் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் கிடைத்த வாங்கு வங்கிகளை வைத்துத்தான் தற்போது பேரம் நடத்தினாலும்  கூட, இத்தனை நாள் அதிமுக - பாஜகவை திட்டிவிட்டு, பாமக போல அதிமுக விரித்த வலையில் விழுந்தால் அவர்களை நம்பியுள்ள கட்சிகாரர்களுக்கும் குறிப்பிட்ட ஓட்டு வங்கிககளுக்கும் இந்தத் தேர்தலில் மக்கள் தக்க  பாடம் புகட்டுவார்கள் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

எனவே நாளை விஜயகாந்த் தலைமையில் நடக்கவுள்ள அக்கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக தன் பலம் அறிந்து தனித்துப் போட்டியிடுமா… இல்லை அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்பது தெரிந்து விடும்.